• Sep 21 2024

மனோஜுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்ருதி.. தன் வாயாலையே கெடும் விஜயாவின் செல்லப்பிள்ளை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில், நாளைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

தற்போது பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்து பாட்டி வீட்டுக்கு கிளம்பியவுடன், வீட்டுக்கு வந்த முத்து மீனாவின் நகையை எடுத்து வைத்து இது கவரிங் நகை எப்படி மாறிச்சு என கேட்கிறார்.

அதற்கு விஜயா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் எப்படி தெரியும்? நீங்க தரும்போதே கவரிங் நகையாக தான் தந்திங்க போல என பிளேட்டை மாற்றி போடுகிறார்.

இந்த நிலையில், நாளைய தினம்  இடம்பெறவுள்ள எபிசோட்டில், ஸ்ருதி மனோஜ்க்கு போனை போட்டு நகைக்கடையில் இருந்து பேசுவது போல பேசுகிறார்.


அதாவது நீங்க வாங்கிட்டு போன கவரிங் நகை பற்றி ஃபீல்ட்பேக் சொல்லுங்க எனக்கேட்க, முதலில் மழுப்பிய மனோஜ் அதன் பிறகு உண்மையை சொல்ல வெளிக்கிடுகின்றார்.

இதனால் அங்கு ஸ்ருதியுடன் மீனா, ரவி மற்றும் முத்து ஆகியோர் மனோஜ் பேசுவதை கேட்டுக் கொண்டு உள்ளார்கள். இவ்வாறு மனோஜ் தனது வாயாலேயே உண்மையை உளற உள்ளார்.

எனவே இதை தொடர்ந்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனாலும் முத்து போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது போல போட்டோக்கள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement