• Jun 01 2026

டூப் நடிகரா? சூர்யாவா? கருப்பு படத்தின் மறைக்கப்பட்ட ரகசியம்.! வைரலாகும் மேக்கிங் வீடியோ

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் புதிய சாதனைகளைப் படைத்து வரும் 'கருப்பு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான நாளிலிருந்தே வசூல் வேட்டையில் ஈடுபட்ட இந்த திரைப்படம், உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தயாரிப்பாளர் முதல் திரையரங்க உரிமையாளர்கள் வரை அனைவருக்கும் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. சூர்யாவின் திரையுலக வரலாற்றிலேயே அதிக வசூலைப் பெற்ற படமாக 'கருப்பு' உருவெடுத்திருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற 'காவல்கார கருப்பு' கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியது. முகம் முழுவதும் மாற்றப்பட்ட தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பு ஆகியவற்றால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். "உண்மையில் அது சூர்யாதானா?", "டூப் நடிகரா?" என்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக எழுந்தன.


இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது படக்குழு, சூர்யா காவல்கார கருப்பாக மாறிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், பல மணி நேரங்கள் மேக்கப் செய்து, கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொள்ளும் சூர்யாவின் அர்ப்பணிப்பு தெளிவாக பதிவாகியுள்ளது.

மேலும், மேக்கப் முடிந்த பிறகு படப்பிடிப்பு தளத்தில் சூர்யா அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் காட்சிகளும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. ஒரு சில நிமிடங்களே திரையில் தோன்றிய கதாபாத்திரத்திற்காக கூட இவ்வளவு மெனக்கெடலா என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், "இது தான் சூர்யாவின் அர்ப்பணிப்பு", "தேசிய விருதுக்கு தகுதியான மாற்றம்" என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு கிளைமேக்ஸ் காட்சியால் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய சூர்யா, தற்போது அந்தக் காட்சிக்குப் பின்னாலிருந்த கடின உழைப்பையும் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் பாராட்டுகளை மீண்டும் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement