• May 26 2026

விஷம் குடிச்சு சாவுங்களே.. செத்த பயலுகளா... திடீரென பெண்ணாக மாறிய ஜி.பி.முத்து! ஏன் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

டிக் டாக் செயலி மூலம் தமிழ் மக்களிடம் நன்கு பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து. அந்த செயலி தடை செய்யப்பட்டதும் யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிக்பாஸ் 6வது சீசனிலும் கலந்து கொண்டார். ஆனாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நன்கு விளையாடி வந்த அவருக்கு, குடும்பத்தை பிரிந்து ரொம்ப நாள் இருக்க முடியவில்லை. இடையில் வெளியேறினார்.


அதன்பிறகு சில படங்கள், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜி.பி.முத்து, குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியிலும் பங்குபற்றி இருந்தார். தனது யூடியூப் சேனலையும் நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில், அவரது இன்ஸ்டா பக்கத்தில் பெண்ணாக எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை பேசி பகிர்ந்துள்ளார்.


அதாவது, ஜி.பி.முத்து ராமர் பாடல் ஒன்றை பகிர, அதற்கு சங்கி என ரசிகர்கள் பேசி கமெண்ட் செய்துள்ளனர்.

இவ்வாறு வழமை போல ரசிகர்கள் பதிவிட்ட கமெண்ட்க்கு பதிலளிக்கும் வகையிலேயே, பெண் உருவத்தில் திட்டிப் போட்டுள்ளார்.

தற்போது குறித்த காணொளி வைரலாகி வருவதுடன், தாறுமாறாக கமெண்ட்களும் குவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement