• Feb 21 2025

Bigg Boss பிறகு பட வாய்ப்பு ஒன்னும் கிடைக்கல...சாமியாராக மாறிய Dhanalakshmi

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தா் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது தான் நிறைவுக்கு வந்தது.  

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் தனலட்சுமி. இவர் அதற்கு முன்பு இன்ஸ்டா ரீல்ஸ், வீடியோக்கள் மூலமாக பிரபலம் ஆனதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் ஷோவில் 77 நாட்கள் வரையில் தனலட்சுமி இருந்தார் . அதற்கு பிறகு தனலட்சுமிக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.


இந்த நிலையில், தற்போது தான் முருகனுக்கு மாலை போட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன் போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் பதிலளித்துள்ளார் தனலட்சுமி. அதன்படி, ரசிகர் ஒருவர் பிக் பாஸ் அப்புறம் பட வாய்ப்பு கிடைச்சுதா என கேட்க, நல்லதா கிடைக்கல.. அதனால பண்ணல என்றார்.

மேலும், தனக்கு 10 வருடங்கள் கழித்து தான் திருமணம் என சொல்லி உள்ளார்.


Advertisement

Advertisement