தென்னிந்திய சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடியான நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் வரும் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
நீண்ட காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் திருமண அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.
இந்த திருமண அறிவிப்பிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.

மேலும் இவர்களுடைய திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 4-ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திருமணத்தை முன்னிட்டு நடிகர் விஜய் தேவரகொண்டா தனது நண்பர்களுடன் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

Listen News!