• Jun 28 2024

படம் நல்லா இல்லன்னு சொல்லாதீங்க.. 120 ருபால கோபுரம் கட்ட முடியாது! எம். எஸ். பாஸ்கர் அதிரடி பேச்சு

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய சாதி சலீம் தற்போது நடிகர் விதார்த் கதாநாயகனாக வைத்து இயக்கிய படம் தான் லாந்தர்.

இந்த திரைப்படத்தில் சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா, பசுபதி ராஜான், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட எம்.எஸ் பாஸ்கர் திரையரங்கில் படம் பார்க்க வருபவர்களுக்கு  வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், 120 ரூபாய் வைத்து யாரும் கோபுரம் கட்டப்போவதில்லை. படம் பிடித்தது என்றால் நாலு பேருக்கு சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். இதை விட்டுவிட்டு படத்துக்கு போகிறவர்களிடம் அந்த படத்திற்கு போக வேண்டாம் நல்லாவே இல்லை என்று சொல்லாதீர்கள். ஒரு படம் எடுப்பதற்கு எத்தனை பேர் உழைக்கின்றார்கள் தெரியுமா? எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? இவற்றையெல்லாம் தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement