• Jan 20 2025

செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன்! தளபதி விஜயின் x தள பதிவு வைரல் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.


குறித்த சம்பவத்தை தொடர்ந்து பல பிரபலன்களும் தங்கள்  இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறே தமிழ் சினிமாவில்  தவிர்க்க முடியாத முன்னணி நடிகரும் தமிழக  வெற்றிக்கழகம் கட்சியின்  தலைவருமான தளபதி விஜய் x தல பக்கத்தில் இரங்கல் பதிவு போட்டுள்ளார்.


அதில் "குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement