• Jun 08 2025

கமலின் அடுத்த பட இயக்குநர் யார் தெரியுமா..?

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

நாயகன் வெற்றிக்கு பின் மீண்டும் கமல் ஹாசன் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளியாகிய ‘தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. விமர்சனங்கள், ட்ரோல்கள் என சமீபநாட்களில் படம் விவாதத்திற்குள் சிக்கியுள்ளது.


இந்நிலையில் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீர தீர சூரன் போன்ற படங்களை இயக்கிய எஸ்.யூ. அருண்குமார் தனது அடுத்த படம் rajkamal நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்க உள்ளார்.


தற்போது இந்தப் படத்தில் யாரை நாயகனாக கமிட் செய்யலாம் என்ற விவாதம் நடந்து வருகின்றது. வருகிற நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி ரசிகர்கள் மத்தியில் புதிதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

Advertisement

Advertisement