• Aug 20 2025

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாகும் சூப்பர் ஸ்டார்..! இயக்குநர் யார் தெரியுமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் பட வெற்றிக்கு பின்னர் பிசியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் "மதராஸி" மற்றும் சுதா கெங்கார இயக்கத்தில் "பராசக்தி " எனும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.


மேலும் இவர் "குட் நைட் " பட இயக்குநர் விநாயக் சந்திரசேகருடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தினை பேஷன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்பு பணிகள் ஆவணி மாதம் ஆரம்பமாகவுள்ளது.


மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனிற்கு அப்பாவாக மோகன்லால் நடிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது ஆனால் தற்போது இயக்குநர் இன்னும் அவரிடம் கதை சொல்லவில்லை பேச்சு வார்த்தைகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement