• Dec 04 2024

சோபிதாவிற்கு அடுத்து நாகர்ஜுனா குடும்பத்தில் இணையும் ட்ரெண்டிங் நடிகை... யார் தெரியுமா!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் நாக அர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கு திருமணம் கூடிய விரைவில் நடக்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. அடுத்த மாதம் இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. 


இந்நிலையில் இந்த குடும்பத்தில் இன்னுமொரு நடிகை இணைய போவதாக தகவல் வலம் வருகிறது. நடிகர் நாகர்ஜூனாவின் உறவினர்களில் ஒருவர் தான் நடிகர் அக்கினேனி சுஷாந்த். இவர் ஜோடியாக கோட் மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரியை திருமணம் செய்துகொள்ள போவதாக திரை வட்டாரத்தினர் பேசுகின்றனர். 

d_i_a


இவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் நிச்சயதார்த்தம் நடக்கவிருப்பதாகவும், இதுகுறித்து அறிவிப்பு இனிவரும் களங்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறுகின்றனர். ஆனால் இது தொடர்பில்  நடிகர் அக்கினேனி சுஷாந்த் மற்றும் நடிகை மீனாட்சி சவுத்ரி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement