• Mar 04 2026

பிக் பாஸ் வீட்டில் டேஞ்சர் ஷோனில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யாரென தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

d_i_a

இதை தொடர்ந்து நான்கு போட்டியாளர்கள் எலிமினிட்டாகி வெளியே சென்றார்கள். ஆனாலும் மேலும் ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவகுமார் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.


இந்த நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் டேஞ்சர்  ஷோனில் இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய விபரம் வெளியாகி  உள்ளது. இது தொடர்பான விபரத்தை பார்ப்போம்.

அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வர்ஷினி வெங்கட், ரியா தியாகராஜன், ரஞ்சித் மற்றும் சிவக்குமார் ஆகியோர் டேஞ்சர் சோனில் சிக்கி உள்ளனர். எனவே இவர்களுள் யார் வெளியேறுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

Advertisement

Advertisement