• May 31 2025

ரசிகர்களின் கனவு கூட்டணி திரையில் மீண்டும்..! யார் யார் தெரியுமா?

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரமாண்ட  இயக்கங்களிற்கு முதன்மை பெற்றவர் மணிரத்தினம். இவர் தற்போது கமல் மற்றும் சிம்பு நடிப்பில் வெளியாகும்.  "தக் லைஃப்" திரைப்படத்தினை இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் ஜூன் 5 ஆம் திகதி திரையரங்களில் வெளியாகுமென ரசிகர்கள் நீண்ட எதிர்பார்ப்பில் உள்ளார் . இந்த நிலையில் மணிரத்னமும் சிம்புவும் மீண்டும் இணைய உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.


"தக் லைஃப்" திரைப்படதில் கமல் மற்றும் சிம்பு இருவரும்  இணைந்து நடித்த முதல் திரைப்படமாகும். இதில் த்ரிஷா ,சான்யா மல்கோத்ரா,அசோக் செல்வன்,அபிராமி , ஐஸ்வர்யா இலட்சுமி,ஜோஜு ஜார்ஜ், நாசர்,பங்கஜ் திரிபாதி  எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து மணிரத்னமும் சிம்புவும் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .


சிம்பு நடிப்பில் காதல் படம் ஒன்றை மணிரத்னம் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தில் "ருக்மணி" கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் "லைக்கா நிறுவனம்" இந்த திரைப்படத்தினை தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய படத்திற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கபடும் என எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.




Advertisement

Advertisement