• Aug 02 2025

நீட் பரீட்சை மட்டும் உலகம் கிடையாது உலகம் இதை விட பெரிது ! அரங்கம் அதிர விஜயின் பேச்சு !

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரும் தமிழக வெற்றி கழக காட்சியின்  தலைவரான  விஜய் இன்று பிளஸ் ரூ தேர்வில் மாநில அளவில் முதன்மை புள்ளிகள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தும் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் விஜய் மேடையில் பேசும் போது முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.


படிப்பில் சாதிக்க வேண்டும், படிப்பும் சாதனை தான் அதை நான் மறுக்கவில்லை அதற்காக ஓரே ஒரு படிப்பில் மட்டும் சாதிப்பது கிடையாது ஒரே விடயத்தை மட்டும் சிந்தித்து மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள் . இதனை ஏன் சொல்லுகின்றேன் என்றால் "நீட் பரீட்சை  மட்டும் உலகம்  கிடையாது உலகம் இதை விட பெரிது அதில்  நீங்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன" எனக் கூறியிருந்தார்.


மேலும் கூறுகையில் "சாதி, மதம் எனப்பார்த்து பிரிந்து போகாதீர்கள்" "விவசாயிகள் சாதி, மதம் பார்த்தா உணவை விளைய வைக்கிறார்கள், தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்தா பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள் ,வெய்யில், மழை எல்லாம் சாதி மதம் பார்த்தா வருகின்றது". இல்லை நாம் எமது வாழ்க்கைக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு மற்றதை எல்லாம் ஒதுக்கி விட வேண்டும். அதாவது போதைப் பொருட்கள்,சாதி , மதங்களை எவ்வளவு தூரம் ஒதுக்கேலுமோ அவ்வளவு தூரம் ஒதுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். 






Advertisement

Advertisement