• Aug 02 2025

ஹீரோவாக நடிக்கும் பூவையர் ...! வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியரின் சீசன் 6 மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யமானவர் பூவையர். இவர் பல பாடல்களை பாடியும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது "ராம் அப்துல்லா ஆண்டனி" திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.


விஜய் டிவி மூலம் பாடகராக அறிமுகமாகி பூவையர் . தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றார்.  பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி ரசிகர்கள் மத்தியில் நிலைத்து விட்டார். தன்னால் பாடமட்டுமல்ல நடிக்கவும் முடியும் என நிரூபித்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பிகில், மாஸ்ட்டர்,மதகராஜா, அந்தகன், கோப்ரா என திரைப்படங்களை கூறமுடியும். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி வருகின்றார் .


தற்போது  "ராம் அப்துல்லா ஆண்டனி"  திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை "அன்னை வேளாங்கன்னி ஸ்ருடியோஸ் "தயாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 




Advertisement

Advertisement