• Aug 10 2025

ஷாலினி ஜோயா லிட்டில் ஸ்டாராக நடித்த சீரியல்கள் எவை தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள நடிகையான ஷாலினி ஜோயா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றி படு பேமஸ் ஆகியுள்ளார். இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது நடிகை ஷாலினி ஜோயாவின் குழந்தை பருவ  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகின்றது.

2004 ஆம் ஆண்டு வெளியான கொட்டேஷன் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாலினிக்கு,  அதன்பிறகு தமிழிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ராஜா மந்திரி என்ற படத்தில் மூலம் தமிழில் முதன்முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்பு கண்ணகி படத்திலும் நடித்திருந்தார்.


தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கு பற்றி உள்ளார் ஷாலினி ஜோயா. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி சக போட்டியாளருக்கு டாப் கொடுத்து வருகின்றார்.

மேலும் மலையாளத்தில் ஒளிபரப்பான குடும்ப ஜோகம், ஆட்டோகிராப் போன்ற சீரியர்களில் ஷாலினி ஜோயா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement