• Jan 18 2025

" 'புறநானுறு' கண்டிப்பாக நடக்கும்...." திட்ட வட்டமாக சொன்ன இயக்குனர் சுதாகொங்கரா.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் சுதாகொங்கரா இந்திய திரையுலகம் அறிந்திருக்கும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர்.இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் 2010 ஆம் ஆண்டில் தனது முதல் படமான "துரோகி" மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

ரத்தன் டாடா வாழ்க்கை வரலாற்றை ...

அதைத்தொடர்ந்து இவரின் இயக்கத்தில் வெளிவந்த "இறுதிச்சுற்று" திரைப்படம் மாதவன் அவர்களுக்கு தமிழில் ரீ என்றி கொடுத்ததுடன் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.அதைத்தொடர்ந்து இவரின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த "சூரரைபோற்று" திரைப்படம் மெகா ஹிட் வரிசையில் இணைத்தது.

Suriya's latest official update on ...

தொடர்ந்தும் சூர்யாவுடன் இணைகிறார் சுதாகொங்கரா என செய்திகள் வெளியாகி குறித்த படமானது தமிழ் கால ஆக்சன் திரில்லர் கதையாக உருவாவதாகவும் படத்தின் தலைப்பு "புறநானூறு" எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.சில கால இடைவெளியில் படத்தின் அப்டேட் ஏதும் வெளியாகாத நிலையில் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின.

Shoot Postponed Indefinitely ...

இந்நிலையில் "சூரரைபோற்று" திரைப்படத்தின் இந்தி ரீமேக்கினை முடித்திருக்கும் சுதாகொங்கரா அண்மையில் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய பேட்டியில் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது "'புறநானுறு' கண்டிப்பாக நடக்கும்..., காலங்கள் ஆனாலும் அது கட்டாயம் வெளிவரும்" என திட்ட வட்டமாக கூறினார்.  

Advertisement

Advertisement