• Jan 18 2025

புதிய தொடரில் கமிட்டாகிய முத்தழகு சீரியல் நடிகர்! எந்த சீரியல் தெரியுமா?

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முத்தழகு சீரியல் நடிகர் ஆனந்த் பாபு தற்போது வேறு ஒரு புதிய சீரியலில் கமிட்டாகி உள்ளார். இதன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.   


பிரபல நடிகர் நாகேஷின் மகன் தான் ஆனந்த் பாபு தந்தைக்கு பிறகு சினிமாவில் நடிக்க வந்த இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதனால் கிடைத்த கேரக்டர்களில் நடித்து பிரபலமானார். வெள்ளித்திரை தாண்டி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.


இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முத்தழகு சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த ஆனந்த் பாபு அந்த சீரியல் நிறைவு பெற்ற நிலையில் தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் "பூங்காற்று திரும்புமா "என்ற தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த புதிய தொடரில் மோதலும் காதலும் நடிகர் சமீர் மற்றும் முத்தழகு சீரியல் நடிகை ஷோபனா இணைந்து நடிக்கவுள்ளதாக எதற்கனவே தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement