• Sep 01 2026

ரஜினியின் 'தர்மன்' படத்தில் குத்தாட்டம் போடப்போகும் பிரபல நடிகை.. யார் தெரியுமா?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘தர்மன்’. இப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே படத்தில் இடம்பெறும் சில முக்கியமான கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.


‘தர்மன்’ படத்தில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல், ‘சிவாஜி’ படத்துக்குப் பிறகு நடிகை ஸ்ரேயாவும் மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஒரு கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர மேலும் சில பிரபலங்கள் படத்தில் நடித்திருப்பதாகவும், அவர்களின் கதாபாத்திரங்கள் தற்போது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ரஜினி படங்களில் ஒரு பாடலுக்கு பிரபல நடிகையை குத்தாட்டம் ஆட வைப்பது சமீபகாலமாக பேசுபொருளாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா, ‘ஜெயிலர் 2’ படத்தில் பூர்ணா மற்றும் நோரா ஃபதேஹி, ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே ஆகியோர் குத்தாட்டம் போட்டிருந்தனர்.

அந்த வரிசையில் ‘தர்மன்’ படத்தில் யார் குத்தாட்டம் போடுகிறார் என்பதே தற்போது மிகப்பெரிய சஸ்பென்ஸ். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு நடிகை கயாடு லோஹர் நெருக்கமானவர் என்பதால், அவர்தான் இந்த பாடலுக்கு நடனமாட வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Advertisement

Advertisement