• Mar 11 2026

ஜோவிகாவின் ஆதரவு எந்த போட்டியாளருக்கு தெரியுமா? பெரும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்! வைரலான இன்ஸ்டா ஸ்டோரி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் ஜோவிகா. ஆரம்பத்தில் ரசிகர்களின் அன்பை பெற்ற இவர், நாளடைவில் மக்களால் வெறுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள மாயா தொடர்பில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிந்துள்ளார் ஜோவிகா.


அதன்படி, குறித்த வீடியோவில் ஜோவிகாவை ரொம்ப பிடிக்கும் என மாயா சொல்லியுள்ளார். இதனை பகிர்ந்து தனது ஆதரவு மாயாவுக்கு தான் என சொல்லாமல் சொல்லி உள்ளார் ஜோவிகா.

இதை தொடர்ந்து ஜோவிகாவின் தீவிர ரசிகர்களும் தலைவியை பின்பற்றும் வண்ணம், மாயாவுக்கே ஆதரவு தெரிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement