• Mar 13 2026

GOAT படத்தின் அடுத்த ஷூட்டிங் எங்கு தெரியுமா? வேற லெவலில் நடக்கும் பிளான்.?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவன், மன்சூர் அலிகான் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தார்கள்.

இதைத்தொடர்ந்து இளைய தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயரிடப்பட்டுள்ள படத்தில் தற்போது நடித்து வருகிறார்.


இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், ஜோகி பாபு, வைபவ், பிரேம்ஜி அமரன் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள்.

அது மட்டும் இன்றி ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக விஜயகாந்தையும் இதில் நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.


இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்க இருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம்.

இதை அடுத்து அடுத்த ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement