• Dec 04 2022

மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன் ரிலீஸ் எப்போது தெரியுமா- உதயநிதி ஸ்டாலின் கூறிய தகவல்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

மாமன்னன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை, உதயநிதி ஸ்டாலின் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்து கூறியுள்ளார்.

மாமன்னன் படத்தில்  கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் மார்ச்-4 ல் ஆரம்பமாகியது. இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்திருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் மாமன்னன் என சொல்லப்படுகின்றது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இவ்வாறுஇருக்கையில்  உதயநிதி ஸ்டாலின்  பிரத்யோ ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், மாமன்னன் படம் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார். "மாமன்னன் முழுக்க முழுக்க அரசியல் திரைப்படம். அடுத்த வருடம் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் மாமன்னன் ரிலீஸ் திட்டமிடப்பட்டுள்ளது" என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.