• Jan 19 2025

சோகத்தில் ராணுவ வீரர் முகுந்த வரதராஜன் மனைவி! அமரன் படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அமரன்.சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் இது வரைக்கும் நடிக்காத ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதில் முகுந்த் v என்று அவருடைய பெயரை டீசரிலே அறிவித்து விட்டனர்.


இந்த திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது. ராணுவ வீரராக இருந்த இவர் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி இறுதியில் எதிர் அணி தாக்குதலால் மரணமடைந்தார். இவரின் மரணம் இந்திய மக்களுக்கே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் அப்படி ஒரு கதாபாத்திரத்தினை தாங்கி தான் நடித்திருக்கிறார். அந்த படத்தின் டீசரை பார்த்த முகுந்த வரதராஜ காதல் மனைவி "அமரன் நிரந்தரமானவன், இத எப்படி சொல்லுறது என யோசிச்சேன் ஆனால் இப்ப சொல்லுறேன் அவர் இறந்து 10 வருடங்கள் ஆகுது. அவருடைய தேச பக்த்தியை நிரந்தரமாக்குற நேரம் இது. இந்த படத்தினை ரொம்ப எதிர்பார்த்து இருக்கேன். என மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement