• Apr 20 2026

தனுஷ் தயாரிக்கும் புதிய படம் குறித்து லீக்கான அப்டேட்.! என்ன தெரியுமா?

shali / 2 hours ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 54வது திரைப்படமாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கதைக்களமும், இயக்குநரின் அணுகுமுறையும் இந்த படத்தை வித்தியாசமாக மாற்றும் என கூறப்படுகிறது.


இந்த நிலையில், தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் 20வது திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தை இயக்குநர் ரமேஷ் நந்தன் இயக்க உள்ளார். மேலும், தயாரிப்பில் தனுஷுடன் ஹரிதா லிங்கசாமி இணைந்து பணியாற்ற உள்ளார். இதன் மூலம் புதிய கூட்டணி உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தனுஷ் எடுத்து வரும் முயற்சிகள் ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement