தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், தனது இயல்பான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் எப்போதும் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா, அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அவர் மிகவும் எளிமையாகவும் கவர்ச்சியான லுக்கிலும் தோன்றியுள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்கினை குவித்து வருகின்றனர். இவ்வாறு தனது ஸ்டைல் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் அனுபமா, இன்னும் பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!