• May 06 2026

MGR குறித்த சர்ச்சைக்கு பிறகு மன்னிப்பு கேட்ட பிரசாத்.. விஷால் சொன்ன பதில் என்ன தெரியுமா

shali / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான ராஜேந்திர பிரசாத் சமீபத்தில் நிகழ்ந்த விருது வழங்கும் விழாவில் பேசிய கருத்து தற்போது தென்னிந்திய திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழாவில் அவர், மறைந்த தெலுங்கு நடிகர் காந்தா ராவ் அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட விருதை பெற்றார். விருதை பெற்ற பிறகு மேடையில் பேசியபோது அவர் கூறிய சில கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பின.


அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், காந்தா ராவ் நடித்த காலத்திலேயே கத்தி சண்டை காட்சிகளில் மிகுந்த திறமை பெற்றவர் என்றும், அவர் கத்தி சண்டை செய்வதைப் பார்த்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான M. G. R கூட பயந்து போவார் என்று கூறியிருந்தார். காந்தா ராவின் திறமையை புகழ்ந்துகொண்டே அவர் கூறிய இந்த கருத்து பலருக்கும் ஆச்சரியத்தையும், அதே சமயம் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

குறிப்பாக, மறைந்த நடிகரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் குறித்து இவ்வாறு கூறியிருப்பது சரியானதல்ல என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து விஷால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து பெரும் கவனத்தை ஈர்த்தது.


அந்த பதிவில் விஷால், நடிகர் ராஜேந்திர பிரசாத் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். “ஒரு கலைஞரைப் புகழ்வதற்காக மற்றொரு கலைஞரை இழிவுபடுத்துவது சரியானது அல்ல” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு வெளியானதும், சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் குறித்து மேலும் பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர்.

இந்த சூழ்நிலையில், ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து நடிகர் ராஜேந்திர பிரசாத் தனது தரப்பை விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்றும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த கருத்தை கூறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், தன்னுடைய பேச்சால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அவரது இந்த விளக்கம் வெளியாகியதும், இந்த விவகாரம் குறித்து புதிய திருப்பம் ஏற்பட்டது. ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து, நடிகர் விஷாலும் இதற்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மன்னிப்பு கேட்டதற்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement