• Mar 26 2026

விஜய் GOAT திரைப்பட Heroineஐ கலாய்த்த R J Balaji... என்ன சொன்னார் தெரியுமா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்பில் உருவாகி வரும் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டனர். காஷ்மோரா, ரௌத்திரம் போன்ற படங்களை இயக்கிய கோகுல் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி படம் தொடர்பாக இவ்வாறு கருத்து தெரிவித்தார். 


என்னுடைய திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த டெய்லர் லாஜய் இவ்வளவு பெருசாக்கிய விஜய் சேதுபதி அவர்களுக்கு நன்றி எனக்கு நல்ல நண்பர், நாங்க சேந்து நடிச்சி இருக்கம். செய்தியாளர்கள், ரசிகர்கள் எல்லாருக்குமே நன்றி. 


இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது ரோபோ சங்கர் சாருக்கு  உடம்பு சரியில்ல, ஆனா அதுஎல்லாம் பொருட்படுத்தாமா  நடிச்சி இருக்காரு, தமிழ் சினிமாவில் அடுத்த ஹீரோவாக ஆக போற கிஷான் தாஸ் அவரே 3 படத்துல ஹீரோவா நடிச்சி இருக்காரு அவரு இந்த படத்துல நடிச்சது சந்தோசம்.

கிஷான் தாஸ் ஜோடி ரோபோ சங்கர் ஜோடி வந்து இருக்காங்க, எனக்கு ஜோடியா 2 பேர் நடிச்சி இருக்காங்க ஆனா 2 பேரும் இன்றைக்கு வரவில்லை, இந்த பட ஷூட்டிங் நேரம் மீனாட்சி சவுத்ரி இத்தனை பேர் வந்து இருக்காங்க, இதான் ஷூட்டிங் இஸ்பாட்டா பெரிய பெரிய நடிகர்கள் வந்து இருக்காங்க என்று ஆச்சரியமாக பாத்தாங்க இப்ப இந்த பட த்ரில்லருக்கு வர முடியல காரணம் நடிகர் விஜய் காட் படத்தில் நடிப்பத்தால் ரொம்ப பிசியா இருக்குறாங்க என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement