தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்களோ, அவற்றுக்கு சமமாகவே ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களையும் வாரக் கடைசியில் பொறுத்திருந்து பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்றைய தினம் பல திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளியாகியுள்ளன. அவை என்னவென்று விரிவாக பார்ப்போம்.
அதன்படி கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்த ‘மேட் இன் கொரியா’ என்ற படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கொரியாவைப் பற்றி பேராசையுடன் வாழும் ஒரு கிராமத்து பெண்ணாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
அதேபோல், இயக்குநர் அஜய் பிஷான் இயக்கத்தில் தனுஷா நடித்தும், விஜய் ஆண்டனி தயாரித்தும் உருவான ‘பூக்கி’ திரைப்படம் கடந்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ரொமான்ஸ் மற்றும் காமெடி ஜானரில் உருவான இந்த படம் இன்று ZEE5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி வெளியான ‘கப்பிள்ஸ் ஃப்ரெண்ட்லி’ திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படம் இன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து ‘Local Times’ என்ற வெப் தொடரும் வெளியாகியுள்ளது. மாறிவரும் டிஜிட்டல் ஊடக சூழலுக்கு மத்தியில் நலிவடைந்து வரும் பாரம்பரிய செய்தித்தாள்களை காப்பாற்ற முயலும் சிலரின் முயற்சிகளையும், அவர்களது நட்பு மற்றும் உறவுகளையும் மையமாகக் கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ‘Aspirants’ சீசன் 3 என்ற தொடரும் இன்றைய தினம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Listen News!