தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகை தீபா சமீபத்தில் பெண்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை தீபா, பெண்களுக்கு பண உதவி வழங்குவதற்குப் பதிலாக கல்வியை இலவசமாக வழங்குவது மிகவும் முக்கியம் என வலியுறுத்தினார். குறிப்பாக பெண்கள் கல்வி கற்றால் அவர்கள் தங்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் முழு குடும்பத்தையும் முன்னேற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அதாவது, “2000,3000 ரூபாய் கொடுப்பது என்ன பிரச்சனையா?. பெண்களுக்குப் பள்ளி, கல்லூரி வரை இலவசக் கல்வியை கொடுங்கள். ஒரு பெண் படித்துவிட்டால் அவளுக்கு யாருடைய துணையும் தேவையில்லை, அவளே அவள் குடும்பத்தைத் தூக்கி நிறுத்திவிடுவாள். கல்வியை இலவசமாக கொடுத்தால் ஒவ்வொருவனும் அவனே சம்பாதித்து அவன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வான். ” என்றார்.
பெண்களின் கல்வி ஒரு குடும்பத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மாற்றும் முக்கிய சக்தி எனவும் அவர் தெரிவித்தார். பெண்கள் படித்து வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டால் குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் அந்த குடும்பத்தின் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்று அவர் கூறினார்.
அவரது இந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் ஆதரவைப் பெற்றுள்ளன. பலர் நடிகை தீபாவின் கருத்தை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக பெண்களின் கல்வி குறித்து அவர் கூறிய கருத்துகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!