பிரபல இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான 'அயலான்' படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
பொங்கல் தினத்தன்று வெளியான அயலான் திரைப்படம், ரசிகர்கள், குட்டிஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், அயலான் திரைப்படத்தின் ஆறாம் நாளுக்கான வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, 6வது நாளான நேற்று அயலான் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் 6 நாட்களில் அயலான் மொத்த வசூல் 60 முதல் 64 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும், இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!