• Sep 20 2024

வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியரின் ரோல் என்ன தெரியுமா? அடி பொலி அப்டேட்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அத்துடன்  அமிர்தாபட்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், துஷாரா போன்ற பல நடிகர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கின்றது. 

இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஜெய்பீம் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதுபோலவே இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகின்றது.

வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ளது என படக் குழுவினரே அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில் வேட்டையின் படத்தில் மஞ்சு வாரியரின் கேரக்டர் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதாவது இந்த படத்தில் மஞ்சு வாரியர் தாரா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அதேபோல துஷாரா விஜயன் சரண்யா என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஏற்கனவே ரித்திகா சிங் ரூபா என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement