• Apr 16 2026

பயங்கரமான டீசர்! திரில்லர் நிறைந்த 'ஐந்தாம் வேதம்'... எப்போது ரிலீஸ் தெரியுமா?

shali / 1 year ago

Advertisement

Listen News!

90களில் புகழ்பெற்ற புராண சாகச த்ரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குனர் நாகா இயக்கியிருக்கும், ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் அசத்தலான டீசரை வெளியிட்டுள்ளது. சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். 


தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த சீரிஸ் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரிஸின் டீசர், சீரிஸின் மீதான ஆவலை பன்மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது. அனு தனது தாயின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு, வாரணாசிக்கு செல்லும் ஒரு பயணத்தில் இந்த கதை தொடங்குகிறது. 


வழியில், ஒரு மர்மமான நபரை அவள் சந்திக்கிறாள், அவர் ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தை அவளிடம் ஒப்படைக்கிறார், அதைத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் ஒப்படைக்கும்படி கூறுகிறார் - ஐந்தாம் வேதத்தின் ரகசியம் அடங்கிய அந்தப் பொருள் பல பல ரகசியங்களை உடைக்கிறது. தயங்கியபடி அந்தப் பணியை ஏற்றுக்கொள்ளும் அனு, பல சிக்கல்களுக்கு உள்ளாகிறாள். 


மேலும் பலரும் அந்தப் பொருளை அடைய போராடுவது அவளுக்கு தெரிய வருகிறது. பல ஆபத்துகளும் அவளை சூழ்கிறது. இந்தத் தடைகளை தாண்டி அவள் தன் பயணத்தில் வெற்றி அடைந்தாளா? என்பதுதான் ஐந்தாம் வேதத்தின் கதைக்களம்.  அக்டோபர் 25 ஆம் தேதி ஐந்தாம் வேதம் ரிலீசாகிறது.


Advertisement

Advertisement