• Oct 31 2024

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா திருமணம் செய்திருக்கும் பிரபலம் யார் தெரியுமா?- இத்தனை கோடி சொத்து வைத்துள்ளாரா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான கோ என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை கார்த்திகா. இவர் 80களில் பிரபல்யமான நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகள் ஆவார்.முதல் படத்திலேயே அதிகளவிலான ரசிகர்களை பெற்ற கார்த்திகா நாயர். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்தார்.

இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த வெற்றி பெற்றுத்தராததால், தனது அப்பாவின் ஓட்டல் தொழிலை கவனித்துக்கொண்டு இருந்த கார்த்திகா நாயருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோஹித் மேனன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தின் போது கார்த்திகா நாயர் அணிந்திருந்த புடவை மற்றும் நகைகள் ரசிகர்களைப் பெரும் கவர்ந்திருந்தது.


இந்த நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகை ராதா பல ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சொந்தக்காரி, சினிமாவில் சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் நட்சத்திர ஓட்டலில முதலீடு செய்துள்ளனர். அதே போல தனது மகளை நடிகையாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். 

ஆனால், அவர்கள் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், கார்த்திகா நாயகருக்கு படவாய்ப்பு வரவில்லை என்பதால் திருமணம் செய்து வைத்துள்ளார். நடிகை ராதிகா மற்றும் அம்பிகாவிற்கு சென்னையில் சுமார் 25 ஏக்கர் நிலத்தில் ஸ்டோடியோ உள்ளது. 


அதே போல திண்டுக்கல்லில் சொந்த மில் ஒன்று உள்ளது. பல கோடிக்கு சொந்தக்காரியான ராதா தனது மகளுக்கு 500 சவரன் நகையை போட்டு தனது மகளுக்கு திருமணம் செய்துள்ளார். ரோகித் என்பவருக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் சொந்து இருக்கும்,நிச்சயமாக அவர் ஒரு தொழிலதிபராகத்தான் இருப்பார் என்றும் பயில்வான் தெரிவித்துள்ளார்.


Advertisement