• Jan 19 2025

அர்ஜுனை திருமணம் செய்த ஷக்தி, மாப்பிள்ளையைக் கடத்த தயாரான பார்த்திபன்- Eeramaana Rojaave Season 2 சீரியலின் இறுதி ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொணடிருக்கும் சீரியல் தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த சீரியல் தற்பொழுது முடிவு கட்டத்தை எட்டியுள்ளது.இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அர்ஜுன் சென்று ஷக்தியிடம் கல்யாணம் என்ற ஒன்று நடந்தால் அது உன் கூட தான் நடக்கும் என்று சொல்கின்றார். அதற்கு சக்தி எனக்கு எந்த காலத்திலும் உன் கூட மட்டும் திருமணம் நடக்கக் கூடாது என்று சொல்ல அர்ஜுன் கிளம்பிப் போகின்றார்.

தொடர்ந்து ப்ரியாவும் காவியாவும் ஷக்தியைக் கட்டிக்கப் போற மாப்பிள்ளைக்கு ட்ரெஸ், நகை எல்லாம் அளவு தெரியாமல் எடுத்திருக்கிறோம். ஷக்தி கிட்ட கேட்ட போது அர்ஜுன் மாதிரி தான் மாப்பிள்ளை இருப்பாரு என்று சொன்னாள்,அதான் அர்ஜுனுக்கு போட்டுப் பார்க்கின்றோம் என சொல்ல ஜீவாவும் பார்த்திபனும் அதிர்ச்சியடைகின்றனர்.

தொடர்ந்து கோயிலில் மாப்பிள்ளை யாரென்று பார்ப்போம் அதுக்கு பிறகு மாப்பிள்ளையைத் தட்டித் துாக்குவோம் என ஜீவாவும் பார்த்திபனும் செல்கின்றனர். அங்கே அர்ஜுன் தான் மாப்பிள்ளை என காவியாவின் அப்பா சொன்னதும் ஷக்திக்கும் அர்ஜுனுக்கும் திருமணம் நடைபெறுகின்றது. இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது. 


Advertisement

Advertisement