• Feb 14 2026

"வித் லவ்" படத்தின் இரண்டாவது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளியான பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய முயற்சிகள் வெற்றி பெறத் தொடங்கியுள்ள நிலையில், இளம் படைப்பாளிகளின் படங்கள் ரசிகர்களிடையே நல்ல கவனம் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள ‘வித் லவ்’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். ஒரு புதுமையான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘வித் லவ்’, தனது மென்மையான கதை சொல்லல், இசை, மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, மலையாள சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் அனஸ்வரா ராஜன், ‘வித் லவ்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே மலையாள ரசிகர்களிடையே தனக்கென ஒரு வலுவான இடத்தை பிடித்துள்ள அனஸ்வரா, தமிழிலும் தனது முதல் படத்திலேயே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது இயல்பான நடிப்பு மற்றும் அழுத்தமான வெளிப்பாடு, தமிழ் ரசிகர்களிடமும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

கடந்த 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘வித் லவ்’ திரைப்படத்திற்கு, முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், ‘வித் லவ்’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, படம் வெளியான முதல் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு புதிய ஹீரோ மற்றும் அறிமுக இயக்குநர் கூட்டணியில் உருவான படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement