• Apr 20 2026

தியேட்டரில் பட்டையைக் கிளப்பிய “தேரே இஷ்க் மே”.. 7 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் காதல் கதைகள் எப்போதும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளன. அந்தவகையில், சமீபத்தில் வெளிவந்த “தேரே இஷ்க் மே” ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்துள்ளது. இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், பிரபல நடிகர் தனுஷ் கதாநாயகன் வேடத்தில் நடித்து, திரைப்படத்திற்கு மிகவும் வித்தியாசமான பரிமாணங்களை சேர்த்துள்ளார். 


கதாநாயகியாக க்ரீத்தி சனோன், முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் நவம்பர் 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. 

தேரே இஷ்க் மே, அதன் கதை, படப்பிடிப்பு மற்றும் இசை மூலம் ரசிகர்களின் மனதில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிவந்த முதல் நாட்களிலேயே, ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இப்படத்தை பற்றி பரபரப்பாக பேச ஆரம்பித்துள்ளனர். 


இந்நிலையில், இத்திரைப்படத்தின் முதல் 7 நாட்களிலான வசூல் தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. அதன்படி, தேரே இஷ்க் மே உலகளவில் 7 நாட்களில் 118.76 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம், காதல் படங்களுக்கு ஒரு புதிய சாதனை ஏற்பட்டு, திரையுலகில் பெரிய வசூல் சாதனையை பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement