• Mar 11 2026

வெளியாகிய 8 நாட்களில் அனிமல் திரைப்படம் செய்த வசூல் எத்தனை கோடி தெரியுமா?- பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்…

stella / 2 years ago

Advertisement

Listen News!

அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் அனிமல். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 

அப்பா மகனுக்கிடையில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இந்த படம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை பெற்றது.இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தில் பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.


தெலுங்கு,  தமிழ்,  ஹிந்தி,  மலையாளம்,  கன்னடம் என 5 மொழிகளிலும் டிச.1-ம் தேதி இந்தத் திரைப்படம் வெளியானது.முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அனிமல் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 550 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement