• May 20 2024

கண்ணம்மாவுக்கு வந்த விவாகரத்து நோட்டீஸ்.. லட்சுமி செய்த வேலை-இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கி வருவதோடு கடந்த 2019ம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வருகின்றது

இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் லட்சுமிக்கு அப்பா பாரதிதான் என தெரிந்த போதிலும் அது பற்றி மேலும் கதை நகரவில்லை. பாரதிக்கு டிஎன்ஏ சோதனை நடக்கும் வேலை கூட நடக்கவில்லை. இப்படி கதைக்க சம்பந்தமான எந்த விஷயமும் இல்லாமல் வேறு வேறு விஷயங்களால் கதையை ஓட்டி வருகிறார் இயக்குநர்.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

அஞ்சலி கண்ணம்மாவின் வீட்டிலிருந்து வீட்டுக்கு போனதும் கோர்ட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்தததை பார்த்து லட்சுமி கண் கலங்கி அழுததை அவளை சமாதானப்படுத்த முடியவில்லை என கூறுகிறார். எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு என அஞ்சலி சொல்கிறார்.

மேலும் இந்த நேரத்தில் சௌந்தர்யாவுக்கு போன் அடிக்க கண்ணம்மா தான் என சொல்லி போனை அட்டென்ட் செய்ய லட்சுமி கதறி அழுகிறார். கோர்ட்டில் இருந்து அம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் வந்திருக்கு. கோர்ட்டில் விவாகரத்து கிடைத்து விட்டால் அதன் பிறகு அப்பாவும் அம்மாவும் எப்போது ஒன்று சேர முடியாது என அஞ்சலி சித்தியும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். நான் அம்மா அப்பா எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டும். அப்பா அம்மாவுக்கு விவாகரத்து கொடுக்கக் கூடாது என கூறி அழுகிறார். நீங்க அப்பா கிட்ட பேசுங்க, நீங்க சொன்னா அப்பா கண்டிப்பா கேட்பாரு என லட்சுமி கூறுகிறார். இதைக் கேட்ட சௌந்தர்யா நான் கண்டிப்பா உன் கிட்ட பேசுறேன் விவாகரத்து கொடுக்காத மாதிரி நான் செய்கிறேன் என்று வாக்குக் கொடுக்கிறார்.

இந்த பக்கம் கண்ணம்மா லட்சுமி படித்துக்கொண்டிருக்கும்போது படிச்சு முடிச்சிட்டியா இந்தா கேள்விகளை எழுதி வைத்திருக்கேன். மேலும் பதில் எழுது என சொல்லி புத்தகத்தை வாங்கிக் கொண்டு செல்கிறார். ஆனால் லட்சுமி எல்லாத்தையும் தப்பு தப்பாக எழுதி இருக்க கண்ணம்மா ஏன் இப்படி தப்பு தப்பா எழுதி இருக்க என கேட்க, எனக்கு மனசு சரியில்ல அப்பா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்காரு, விவாகரத்து கிடைச்சுட்டா அப்புறம் அப்பா எப்போதுமே நம்ப வாழ்க்கையில வரமாட்டார் என கூறி கதறி அழுகிறார். இதெல்லாம் பெரியவங்க விஷயம் நான் பார்த்துக்கிறேன் என கண்ணம்மா சொல்ல லட்சுமி விடாமல் அழ அவரை சமாதானப்படுத்துகிறார்.

எனினும் அதன் பிறகு இந்தப் பக்கம் வெண்பா அடக்க ஒடுக்கமாக புடவையை கட்டிக் கொண்டு பொண்ணு பார்க்க வருவதால் ஹோட்டலுக்கு கிளம்பி வந்து சர்மிளாவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி ட்ராமா போடுகிறார். ஷர்மிளா நல்ல விஷயமா சொன்னேன் என சொல்லி சாந்தியை கூட சென்று வருமாறு அனுப்பி வைக்கிறார்.

மேலும் இந்த பக்கம் பாரதி வீட்டில் தயாராகிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த ஹேமா இன்னைக்கு மதியம் சீக்கிரமா வந்திடுங்க இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என கூறுகிறார். என்ன சாப்பிட ஈஸியான கேட்க எங்க ஸ்கூலில் பேச்சுப் போட்டி நடந்தது அதில் நான் தான் ஃபர்ஸ்ட் பிரைஸ், அதுக்குதான் இன்னிக்கி பிரைஸ் கொடுக்கப் போறாங்க என கூறுகிறார். என்னடா டாபிக் என பாரதி கேட்க அது சர்ப்ரைஸ் என சொல்லி விடுகிறார். ரவுடி தான் பேச்சுப்போட்டி எல்லாம் நல்லா பேசுவாரு அவர் கலந்துகலையா என கேட்க இல்லை என கூறுகிறார்.

ஏன் என பாரதி கேட்க டாபிக் அந்த மாதிரி என சொல்கிறார். என்ன டாபிக் என கேட்டேன் சிறந்த டாடி என்னுடைய அப்பா என்பதுதான். அவதான் அவர் அப்பாவை பார்த்ததே இல்லையே அதனால என்ன பேசறதுன்னு தெரியல என கலந்துகொள்ளவில்லை என கூறுகிறார். பாவம் டாடி அவ ரொம்ப வருத்தப்பட்டு பேசினாள் என ஹேமா சொல்ல மத்தவங்க கதை எல்லாம் நமக்கு எதற்கு என பாரதி கோபப்படுகிறார். உடனே சமையல் அம்மா என்கிட்ட எவ்வளவு வந்தா இருக்காங்க நீங்க ஏன் அவங்கள பத்தி பேசினா இப்படி கோபப்படுறீங்க என கேட்க பாரதி சாரி கேட்கிறார். பின்னர் சரி நீ கீழ வெயிட் பண்ணு நான் வந்துவிடுகிறேன் என கூறுகிறார்.

இதன் பிறகு பாரதி ரவுடிக்கு எங்கப்பா பாரதிதான் என யாரும் சொல்லாமல் இருக்கணும். கண்ணம்மாவை கூட சமாளித்து விடலாம் ஆனால் ரவுடியை சமாளிக்க முடியாது. அவளைப் பொறுத்தவரை அவங்க அப்பா வர மாட்டாங்கன்னு இருக்கணும், அதுதான் நல்லது என நினைக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement