• Jun 21 2025

உங்கள் மதத்தில் இருக்கும் பிரச்னைக்களை பாருங்கள்!அமீருக்கு பதில்கூறிய இயக்குநர் பேரரசு!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் பேரரசு. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார். இவர் இயக்கத்தில் வெளியான   திருப்பாச்சி, சிவகாசி ,திருப்பதி ,தர்மபுரி ,பழனி,  திருவண்ணாமலைபோன்ற திரைப்படங்களில் கூறமுடியும். மேலும் இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. இந்நிலையில் இயக்குநர் பேரரசு  முருகன் மாநாடு குறித்து பேசிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது .


மதுரையில் இந்து முன்னணி சார்பாக நாளை முருகன் மாநாடு நடைபெற உள்ளது . இந்நிலையில்  மாநாட்டுக்கான பணிகள் நிறைவுற்ற நிலையில் , பக்தர்கள் பலரும் வருகை தர தொடங்கி இருக்கின்றனர். நாளை நடைபெற உள்ள இந்த மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்த நிலையில் இயக்குநர் அமீரின் கூறிய விடயம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிஉள்ளது.அதாவது  " இங்கு கூடியுள்ள யாருமே முருகனுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் . முருகன் பெயரால் கலவரம் செய்ய துடிக்கும் சங்கிகளுக்கு எதிரானவர்கள்" என்பதை தான் கூறுவதாக தெரிவித்தர். இதனைப் பார்த்த  இயக்குநரும், பாஜக நிர்வாகியுமான பேரரசு பதில் அளித்துள்ளார்.


இயக்குநர்  பேரரசு கூறும் போது , வேறு மதத்தில் இருந்து கொண்டு மற்றுமொரு மதத்திற்கு அறிவுரை சொல்ல கூடாது ,முதலில் உங்கள் மதத்தில்  இருக்கும் நிறை குறைகளை பாருங்கள் இந்து மதத்திற்குள் உங்களுக்குள் என்ன வேலை என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

 

Advertisement

Advertisement