• Aug 03 2025

" ரஜினி, தனுஷ் ஒரே மாதிரி இருப்பாங்க.." நாகார்ஜுனா புகழ்ச்சி..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் , நாகார்ஜுனா, ரஷ்மிகா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் "குபேரா" இந்த படத்தில் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்து அசத்தி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் வெளியாகி இரண்டு நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் தனுஷ் குறித்து நடிகர் நாகார்ஜுனா புகழ்ந்து பேசியுள்ளார்.


அதாவது " ரஜினி சார் மற்றும் தனுஷ் இரண்டு பேருமே செட்ல அமைதியாக தான் இருப்பாங்க. ஷூட்டிங் நடக்கும் போது அவங்க ரெண்டு பேரும் அந்த கதாபாத்திரத்திலே முழுவதுமாக இருப்பாங்க. குறிப்பாக தனுஷ் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பார். யார் கூடவும் பேசக்கூட மாட்டார். ஆனா, யாராவது அவரிடம் பேசினால் நன்றாக பேசுவார். நான் பார்த்த வரைக்கும் தனுஷ் அந்த கதாபாத்திரமாகவே வாழ்வார். ரஜினி சார் எடுத்துக் கொண்டால் ஆக்சன் காட்சிகளைத் தவிர மற்ற நேரங்களில்அனைவரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். இவங்க ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப புதுசா தெரிஞ்சாங்க. ஏனென்றால் நான் செட்டில் எப்போதுமே ஏதாவது பேசிக் கொண்டே இருப்பேன் " என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement