• Aug 26 2025

22 ஆண்டு நிறைவு..! கடவுளுக்கு நன்றி தெரிவித்த ரவிமோகன்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

" உனக்கும் எனக்கும் "," சந்தோஷ் சுப்புரமணியம்","ஜெயம் " போன்ற வெற்றி படங்களை வழங்கிய நடிகர் ரவிமோகன் சமீபகாலமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல இடர்களை சந்தித்து வருகின்றார். அண்மையில் கூட நெருங்கிய தோழி கெனிஷாவுடன் திருமணத்திற்கு வந்து விமர்சனத்திற்கு ஆளாகினார். இந்த நிலையில் தற்போது ரவிமோகனின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.


அதாவது இவர் தமிழில் முதல் முதல் நடித்த "ஜெயம் " படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒன்றினை தனது ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவரது அனைத்து பட கதாபாத்திரங்கள் அடங்கிய போட்டோ ஒன்றும் காணப்படுகின்றது.


இந்த செய்தி இணையத்தில் வைரலாகி ரவிமோகனிற்கு ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement