• Feb 27 2026

VJ பாருக்கு குசும்ப பாத்தீங்களா.? ரெட் கார்டை கேக் வெட்டி கொண்டாட்டம்.. வைரலான வீடியோ

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்9வது சீசனில் விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ரெட் கார்டு வாங்கி வெளியேற்றப்பட்ட சம்பவம் அப்போது பெரும் சர்ச்சையாக காணப்பட்டது. இருவரும் டைட்டில் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரெட் கார்டு வாங்கியது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் போது, அவர்கள் செய்த ஒரு தவறுக்காக இருவரும் நேரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், போட்டியாளர்களும் அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் விஜே பார்வதியும், கம்ருதீனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்கள். கம்ருதீன் பல பேட்டிகளில் தன் காதல் குறித்த கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில், விஜே பார்வதியின் சமீபத்திய இன்ஸ்டா வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது நண்பர்களுடன் ந “On the Red Card” என்று எழுதப்பட்ட கேக்கை அவர் வெட்டி கொண்டாடியுள்ளார்.

மேலும், கேக் வெட்டும் போது 'ரெட் கார்டே..'  என கத்திக்கொண்டே கொண்டாடிய பார்வதியின் செயல் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ரெட் கார்டு வாங்கிய விஷயத்தை இப்படி கொண்டாடுறாரே.. என்றும், சர்ச்சையையும் ஸ்டைலாக ஹேண்டில் பண்ணுறார்.. என்றும் கலவையான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement