• Apr 17 2026

நீங்க கார்டுல எக்ஸ் மார்க் பண்ணீங்களா? அம்பலமான நிக்சனின் பிராடுத்தனம்! விஜய் வர்மாவையும் வெளுத்து வாங்கிய கமல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. ஆரம்பத்தில் மக்களின் எதிர்பார்ப்போடு பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது 90 நாட்களைக்  கடந்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான நான்காவது ப்ரோமோவில், நிக்சனை வறுத்தெடுக்கிறார் கமல்.


அதன்படி, கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினம் பேசிய அர்ச்சனா, கார்டில் எக்ஸ் மார்க் வைக்கப்பட்டதாக கூறுகிறார்.


இதற்கு கமல், அது யாரு பண்ணி இருப்பாங்க என நினைக்கிறீங்க என பிக் பாசிடம் கமல் வினாவ, ஓ.. அப்ப பண்ணி இருக்காங்களா என அர்ச்சனா கேட்கிறார்.

இதை தொடர்ந்து, நிக்சன் நீங்க கார்ட்ட ஏதும் மடிச்சீங்களா? என கமல் கேட்க, நிக்சன் முழித்துக் கொண்டு நிற்கிறார்.


மேலும், விஜய் வர்மாவிடம் நீங்க வெற்றி பெற நான் தான் காரணம் என நிக்சனிடம் சொன்னிங்களே... இதை பார்க்க பலருக்கும் சந்தேகம் வருது என கமல் சொல்லுகிறார்.

இறுதியாக என்ன சொல்லுங்க நிக்சன் என கேட்க, அவர் என்ன சொல்லுவது என்று தெரியாமல் நிற்கிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ...

Advertisement

Advertisement