• Sep 21 2023

மாரிமுத்துவே கார் ஓட்டி வந்ததால் உயிரிழப்பு நேர்ந்ததா?-சிகிச்சையளித்த மருத்துவர் சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் மாரிமுத்து பல வருடத்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இவருக்கான ஒரு இடம் கிடைத்ததே இல்லை, இப்போது தான் மாரிமுத்து என்ற பெயர் அதிகம் சினிமாவில் பேசப்பட்டது.

ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கையே முடிந்தது பலருக்கு சோகம் தான். காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்த அவருக்கு சில மணி நேரங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.


இப்போது தான் அவருக்கான ரீச் கிடைத்தது, அதை அனுபவிப்பதற்கு முன்பே நடிகரின் உயிர் பிரிந்துவிட்டது. இன்று காலை முதல் தமிழ் திரையுலகம் மாரிமுத்து மரண செய்தி கேட்டு கடும் சோகத்தில் உள்ளனர்.

இப்படியான நிலையில் இவர் இறந்ததற்கான காரணத்தை அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் ஆனந்தகுமார் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது நெஞ்சுவலி வந்த போது அவரே தான் காரை ஓட்டிட்டு வந்தாரு. கார் ஓட்டிட்டு வந்த அவரால் காரை விட்டு கீழே இறங்கவே முடில.அவருக்கு மூச்சு எடுக்கவும் கஸ்டமாக இருந்திச்சு. எல்லா ரீட்மென்டையும் ஆரம்பிச்சோம். 


இருந்தாலும் அவரைக் காப்பாற்ற முடில, வாய்ல நுரைநுரையாக வந்து கொண்டிருந்திச்சு. அவங்க வீட்டுக்கு சொன்னோம் அவங்களும் ஏற்றுக் கொண்டாங்கஇ பின்னர் எங்களுடைய ஆம்புலன்ஸ்ல தான் அவருடைய உடலை வீட்டுக்கு அனுப்பி வைததோம் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர் மாரிமுத்து தான் கார் ஓட்டிட்டு வராமல் வேற யாராவது கார் ஓட்டிட்டு வந்திருந்தால், அவரை காப்பாற்றியிருக்கலாம்.

இப்படி நெஞ்சு வலிக்கும் போது ரொம்ப அழுத்தம் கொடுக்கக் கூடாது. இந்த மாதிரியான டைம்ல கார் ஓட்டவோ, நடக்கவோ ,வேற ஏதாவது வேலையோ பண்ணக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement