• Sep 21 2023

என் கல்யாணத்தை பார்க்காமல் எதற்கு போனீங்க-மாரிமுத்துவின் உயிரிழப்பு செய்தியைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளான விஷால்

stella / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சீரியலை வெறுக்கிறவர்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் அந்த தொடரில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துதான்.  ‘இந்தாம்மா ஏய்’ என்ற ஒரே வார்த்தை. பட்டிதொட்டியெல்லாம் பரவியது.

அதை வைத்துக் கொண்டே பல மீம்ஸ்கள் உருவாக ஆரம்பித்தது. சொல்லப்போனால் வடிவேலுவுக்கு பிறகு அதிக மீம்ஸ்களை வாங்கியவர் மாரிமுத்து என்றே சொல்லலாம். பேச்சிலும் செயலிலும் ஒரு நேர்மை இருக்கும்.இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சொந்த மண்ணை விட்டு சென்னைக்கு வந்த மாரிமுத்து இரண்டு படங்களை இயக்கினார். ஆனால் சினிமா அவரை வேறு பாதைக்கு கொண்டு சென்றது. நடிகராக்கி அழகு பார்த்தது.


சினிமாவில் அவருக்கு என்று ஒரு தனி அடையாளமே இருக்கின்றது.அப்படி இருந்தும் சின்னத்திரைக்குள் வந்து அங்கும் தடம் பதித்தார். ஒரே ஒரு சீரியல்தான். ஒட்டுமொத்த புகழையும் தட்டிச் சென்றார். எதிர்நீச்சல் சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அவருக்காகவே பார்த்த ரசிகர்கள்தான் ஏராளம். 

இந்த நிலையில் இவர் டப்பிங் பேசச் சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் தானாகவே ஹாஸ்பிட்டலுக்குச் சென்றிருக்கின்றார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த விடயம் நடிகர் விஷால் இன்டர்வியூ ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது தான் தெரிய வந்தது. இதனால் அவர் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


பின்னர் தொடர்ந்து பேசிய விஷால் மாரிமுத்து சேர் என்னுடன் ரொம்ப நல்லாவே பேசுவாரு,எனக்கு அப்பாவாகவும் நடிச்சிருக்காரு, இதை நம்பவே முடியல.தொடர்ந்து நெஞ்சுவலியால் இறக்கிறாங்க என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடில.என் கிட்ட வேலை விஷயத்திலும் சரி தனிப்பட்ட விஷயத்திலும் ரொம்ப ஓபனாகப் பேசுவாரு. அவர் கூட இருந்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். இப்படியொரு மனுஷன் இறந்திட்டாரு என்பதை என்னால் எடுத்துக்கவே முடில என்றும் என் கல்யாணத்தை பார்க்காமல் எதற்கு போனீங்க என உருக்கமாகத் தெரிவித்துள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement