• Apr 28 2024

படம் வெளியாக முன்னரே மாஸான சாதனை நடத்தி வரும் leo திரைப்படம்- செம குஷியில் பிரபல நிறுவனம்

stella / 7 months ago

Advertisement

Listen News!

இந்த வருடம் வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜுடன் இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்-லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு படத்தின் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

அனிரூத் இசையமைக்க படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ லலித் தயாரிக்கிறார்கள். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நான் டெடி தான் என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும் பல சர்ச்சைகளிலும் சிக்கியது. தொடர்ந்த இரண்டாவது சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகும் என்று அனிரூத் தெரிவித்திருந்தார்.


இப்படியான நிலையில் ‘லியோ’ படத்தின் டிக்கெட் முன்பதிவு இங்கிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில் 10,000-க்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கு படத்தை வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது வரும் நாட்களில் இன்னும் கூடுதலான  டிக்கெட்கள்  விற்பனையாகி சாதனை படைக்குமென எதிர்பார்க்க படுகிறது

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, “ லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை  உருவாக்க வேண்டும் என்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement