சமந்தாவுக்கு இருக்கும் அரிய வகை நோய் தொகுப்பாளினி டிடிக்கும் இருக்கிறதா என்று ரசிகர்கள் குழம்பி போய் கேட்கின்றனர்.
தனக்கு மயோசிடிஸ் எனும் ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் சமந்தா.அத்தோடு தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இதுவும் கடந்து போகும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார் சமந்தா.
அவரின் நம்பிக்கை தான் பலரையும் கவர்ந்துள்ளது. சமந்தா விரைவில் குணமடைந்துவிடுவார் என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்து வருகிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி நீலகண்டன் தெரிவித்திருப்பது தான் பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
சமந்தாவின் போஸ்ட்டை பார்த்த டிடி தெரிவித்திருப்பதாவது...
நாம் எல்லாம் ஆட்டோ இம்யூன் வாரியர்கள்...நம்மால் இதை வெல்ல முடியும். கமான் ஃபைட்டர். எங்கள் அனைவருக்காகவும் செய்யுங்கள்.
ஆட்டோ இம்யூன் பிரச்சனையுடன் போராடும் எங்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷனாக இருக்கவும். இதையும் நீங்கள் வெல்வீர்கள் என தெரிவித்துள்ளார்.
டிடியின் கமெண்ட்டை பார்த்தவர்கள் தெரிவித்திருப்பதாவது...
அக்கா உங்களுக்கு ஆர்த்ரைடிஸ் தானே இருக்கிறது. ஆட்டோ இம்யூன் பிரச்சனையுமா உள்ளது?. சமந்தாவை போன்றே நீங்களும் இதை வென்றுவிடுவீர்கள் அக்கா. சமந்தாவை நீங்கள் ஊக்குவித்த விதம் அருமை அக்கா.அத்தோடு நீங்கள் ரொம்ப தைரியசாலி தான். அந்த ஆண்டவன் உங்களுக்கு தெம்பை அளிக்கட்டும் என கூறியுள்ளனர்.
Listen News!