• Dec 07 2022

பிக்பாஸ் வீட்டுக்குள் பலர் ட்ரை பண்ணியும் மடங்காத குயின்ஸி.. இந்த போட்டியாளரை தான் காதலிக்கிறாரா?

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

 பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை காதல் டிராக்குகள் குறைவாக இருந்த நிலையில், இந்த சீசனில் எல்லாமே எல்லையை தாண்டி நகர்ந்து கொண்டு இருக்கின்றது.காதல எல்லாம் தாண்டிய நிலையிலும் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொஞ்சிக் கொள்வதையும், கடித்துக் கொள்வதையும்  அவதானிக்க முடிகின்றது.

குயின்ஸியை ஆரம்பத்தில் இருந்தே அசல் கோலார் மற்றும் அசீம் கரெக்ட் செய்ய நினைத்து ரூட்டு விட்ட நிலையில், அவர்கள் இருவருக்கும் சிக்காத அவர், இன்னொரு போட்டியாளரிடம் நெருக்கம் காட்டி வருவது  திடீரென அம்பலமாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானி போலவே தான் இருப்பதாக நினைத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் சுற்றி வருகிறார் குயின்ஸி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தலைவர் ஆனதும் அவர் போட்ட ஆட்டமெல்லாம் வேறலெவலில் இருந்ததாக போட்டியாளர்கள் பாதிக்கு பாதி பேர் சொல்லியும், கமல் 90 சதவீதம் மார்க் கொடுத்தார். வெளியே வந்ததும் ஒரு சின்ன ரோல் வெயிட்டிங் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றார்கள்.

வந்ததும் வராததுமாக நடைபெற்ற டான்ஸ் போட்டியின் போதே அசீமுக்கு குயின்ஸி மீது ஒரு கண் இருந்தது. அத்தோடு தனியாக அழைத்து உட்கார வைத்து, நீயும் நானும் க்யூட்டா ஆடினால், அந்த ஜோடி சூப்பராக இருக்குமென ரசிகர்கள் பாராட்டுவார்கள். வெளியே போய் கூட நாம இரண்டு பேரும் சினிமாவில் ஹீரோ ஹீரோயினா நடிக்கலாம் என்றெல்லாம் நூல் விட்டு பார்த்தும், வீட்டில் மகனை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் பேச்சு பேசுறாரு பார் என நினைத்த குயின்ஸி அவரிடம் சற்று தள்ளியே இருந்து வருகின்றார்.

குயின்ஸிக்கு பதிலாக அசீம் உடன் போட்டிப் போட்டு டான்ஸ் ஆடிய ஷெரினாவுக்கும் அசீமுக்கும் நல்ல வேவ் லெந்த் செட்டாகி விட்டது. பொம்மை டாஸ்க்கிலும் நடந்தது என்ன என்பதை பார்க்காத நிலையிலும், கடைசி வரைக்கும் நான் பார்த்தேன் என அசீம் பொய் சொன்ன நிலையில் வாங்கிக் கட்டிக் கொண்டார். எனினும் அதன் பின்னரும், ஷெரினாவுக்கு பின்னால் நின்று பாகுபலி பிரபாஸ் அம்பு விடுவதை போல எல்லாம் நடித்து காட்டிய காதல் நாடகங்கள் ஒரு பக்கம் அரங்கேறி தான் இருந்தது.நல்லா பப்ளியாக இருக்கும் சின்னப் பொண்ணு குயின்ஸியிடம் தான் ஆரம்பத்தில் அசல் கோலார் தனது கோளாறுகளை காட்ட ஆரம்பித்தார். குயின்ஸியின் கைகளை உரசுவது, கடிப்பது, கால்களை அவர் மேல் போட்டு அமர்வது என ஏகப்பட்ட சில்மிஷங்களை செய்து வந்த அவர், குயின்ஸி செட்டாகவில்லை என்பது தெரிந்ததும் நிவாஷினி பக்கம் திரும்பினார்.அசீம் மற்றும் அசல் கோலார் என இரு போட்டியாளர்களும் குயின்ஸியிடம் நூல் விட்டு பார்த்தும் சிக்காத அவர், நேற்றைய போட்டியில் ராம் ராமசாமியின் பொம்மையை வாங்கி கமல் முன்பாகவே ஏகப்பட்ட காதல் வசனங்களை பேசி தீர்த்தது ரசிகர்களை ரொம்பவே ஷாக்கில் ஆழ்த்தியது.


அத்தோடு உங்க ஷர்ட் கூட நல்லா இருந்துச்சு என குயின்ஸி சொன்னதும் ராம் அப்படியே இது தெரியாம நான் தனியாவே சுத்திட்டு இருக்கேனே என நினைத்துக் கொண்டார். அத்துாடு பி.ஆர் புரமோஷனுக்கு 2 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு உள்ளே தூங்கி வழிந்து மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் ராம் ராமசாமி வரும் வாரங்களில் குயின்ஸியுடன் பிக் பாஸ் வீட்டில் டூயட் பாடப் போகிறார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.