• Apr 26 2024

விஜய்யின் “வாரிசு” பட வசூலை மிஞ்சிய தனுஷின் “வாத்தி”...வெளியானது விபரம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கடந்த 17-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த வாத்தி திரைப்படம் 80 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. எனவே இது தனுஷின் சினிமா கேரியரில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறியுள்ளது.

 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இன்னுமே வரும் நாட்களில் அதிகரிக்கும் என தெரிகிறது. தமிழை போலவே தெலுங்கிழும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

இந்த நிலையில், படம் தெலுங்கில் மட்டும் 24 கோடி வரை வசூல் செய்து இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. வாரிசு திரைப்படம் 20 கோடி வரை மட்டும் தான் வசூல் செய்திருந்தது.

மேலும் இந்த வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement