• Mar 28 2023

கேஜிஎஃபில் வேற லெவலில் தங்கலான் பட ஷூட்டிங்..தீயாய் வைரலாகும் BTS புகைப்படம்!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

கர்நாடக மாநிலம் கேஜிஎஃபில் நடைபெற்று வரும் தங்கலான் படத்தின் BTS புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில்  'அட்டகத்தி' மூலம் இயக்குந ராக அறிமுகமான பா. ரஞ்சித், அடுத்த படத்தில் கார்த்தியை வைத்து 'மெட்ராஸ்' என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.இதற்கு அடுத்தபடியாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய திரைப்படங்களையும் அடுத்தடுத்து இயக்கி இருந்தார்.

 தற்போது விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வரும் 'தங்கலான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 

தங்கலான் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது.ஜனவரி மாதம் முதல் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. 

மேலும் இந்த படத்தின் தற்போதைய படப்பிடிப்பு, கேஜிஎஃ பகுதியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கலான் ஷூட்டிங் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

தற்போது இந்த BTS புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement