• Jul 18 2025

வதந்திகளைப் பரப்புங்க ராஜா.! குபேரா இசை வெளியீட்டில் ஆக்ரோஷமாக பதிலடி கொடுத்த தனுஷ்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் தனுஷ். தனது வித்தியாசமான நடிப்பு, கலையின் மீது கொண்ட ஆழ்ந்த அக்கறை, தனித்துவமான படைப்புத் திறன் இவை அனைத்தும் அவரை ஒரு முன்னணி நடிகராக மட்டுமல்ல, ஒரு தரமான மனிதராகவும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்துள்ளது.

எனினும், பிரபலங்களின் வாழ்க்கையில் வதந்திகள் வருவதென்பது சாபமாகவே இருக்கின்றது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக தனுஷ் தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்ட சில கருத்துக்கள், மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில், 'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது, நடிகர் தனுஷ் இந்த அனைத்து வதந்திகளுக்கும் மிகவும் உணர்ச்சிகரமாகவும், நேரடியாகவும் தனது பதிலை கொடுத்திருந்தார். அது தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றது.

தனுஷ் தனது உரையில், “எவ்ளோ வதந்தி வேணும்னாலும் பரப்புங்க. என்ன நெகட்டிவிட்டி வேணும்னாலும் ஸ்ப்ரெட் பண்ணுங்க. ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் ஒன்றரை மாதம் முன்னாடி என்னைப்பற்றி நெகட்டிவிட்டி பரப்புங்க. தம்பிங்களா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா!” எனத் தெரிவித்திருந்தார்.


இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே மாஸ் ரியாக்ஷனை ஏற்படுத்தியது. பலர் இப்போதுள்ள "தனுஷ் வேற லெவல்" என்ற ட்ரெண்ட்டினைப் பகிர ஆரம்பித்துள்ளனர்.

மேலும், “இங்க இருக்குறவங்க என் ரசிகர்கள் கிடையாது. 23 வருஷமா என் கூடவே வந்த companions. நீங்க சும்மா நாலு வரியை சொன்னவுடன போயிடுவார்களா.? ஒரு செங்கலைக் கூட ஆட்ட முடியாது." எனவும் தனுஷ் தெரிவித்திருந்தார்.

தனுஷ் வதந்திகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், அவர் எதையும் கோபத்துடன் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக தன்னம்பிக்கையுடனும் நேர்மையுடனும் பேசியிருந்தார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது ரசிகர்களிடையே பரவி வருகின்றது.


Advertisement

Advertisement